உல்லாச வீடியோவை காட்டி மிரட்டல்.. நான் இப்போ 2 மாசம் கர்ப்பமாக இருக்கேன்.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க பெண் கதறல்

பெண் கிறிஸ்துவ சர்ச்சில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ஆனந்த் மில்லர்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

Intimidation by showing pornographic videos... Police Arrest

ஆபாச வீடியோ காட்டி மிரட்டி பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்து வந்தது. சமீபத்தில் ஒரு குழந்தையும், கணவரும் இறந்துவிட்டனர். இதனால், மற்றொரு குழந்தையை குடும்ப சூழல் காரணமாக மாமியார் வீட்டிலேயே வளர்க்க விட்டுள்ளார். தனியாக இருந்த அந்த பெண் கிறிஸ்துவ சர்ச்சில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ஆனந்த் மில்லர்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை அவளுக்கு தெரியாமலேயே வீடியோவாகவும், போட்டோவும் ஆனந்த் மில்லர் எடுத்து வைத்துள்ளார். இதனிடையே, ஆனந்த் மில்லர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கணவரின் செல்போனை எதார்த்தமாக எடுத்து பார்த்த போது ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இருவரையும் அழைத்து பேசி அறிவுரை வழங்கினர். பின்னர், இந்த வீடியோவையும் டெலிட் செய்தனர். 

இதனையடுத்து, அந்த பெண் வேறு இளைஞரை திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால், ஆனந்த் மில்லர் அந்த பெண்ணை மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் நீ என்னோடு உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்டி மிரட்டி வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது சகோதரரிடம் கூறியதை அடுத்து காவல் நிலையதத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்த் மில்லரை வீடு புகுந்து கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios