36 வயதுடைய மனைவி மீது சந்தேகம்.. பிச்சைக்காரர் வேடத்தில் பின் தொடர்ந்து 56 வயது பேராசிரியர் செய்த காரியம்.!
செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (56). சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த ஜெயவாணி என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனைவியின் மீது ஏற்பட்ட தீராத சந்தேகத்தால் பிச்சைக்காரர் வேடமிட்டு சென்று அவரை பிளேடால் முகத்தில் வெட்டிய 56 வயது பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (56). சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த ஜெயவாணி என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க;- ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இன்ஜினியர்.. நேரம் பார்த்து வீட்டில் புகுந்து பலாத்காரம்.. இறுதியில் நடந்த பயங்கரம்
இந்நிலையில், திடீரென மனைவியின் நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அடிக்கடி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தனது தந்தை இறந்ததால் எழும்பூர் வந்துள்ள அவரது மனைவி ஜெயவாணி வழக்கம் போல வேலைக்காக சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, குமாரசாமி பிச்சைக்காரன் வேடத்தில் தலையில் விக் அணிந்து கொண்டு வந்து ஜெயவாணியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி பிளேடால் ஜெயவாணி முகத்தில் சரமாரியாக கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் ஜெயவாணியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி! காதுவலிக்கு ஆபரேஷன்! சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி.!
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெயவாணியின் கணவர் குமாரசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இதுபோன்று நடந்து கொண்டதாக உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.