சென்னையில் அதிர்ச்சி! காதுவலிக்கு ஆபரேஷன்! சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி.!

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை  பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா. அவர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

Ear pain operation..School girl death in chennai

சென்னையில் தனியார் மருத்துவமனையில் காதுவலிக்கு சிகிச்சைப் பெற்ற 11ம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை  பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா. அவர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாய் நந்தினி அழைத்து சென்றுள்ளார். மருத்துவர்கள் அபிநயாவுக்கு காதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கூறியதை அடுத்து கடந்த 14ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

Ear pain operation..School girl death in chennai

ஆனால், சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக  நந்தினி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அபிநயா  சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Ear pain operation..School girl death in chennai

நந்தினி உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால் மகள் உயிரிழந்ததாக கூறி திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை கலைந்து சென்றனர். 

Ear pain operation..School girl death in chennai

கடந்த ஆண்டு சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios