அழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் சிக்கி சீரழிந்ததாக பெண் இன்ஜினீயர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கபாண்டியன். இவருடைய மகன் தான் காசி. MBA வரை படித்த இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், தன்னுடைய தந்தையின் கோழி கடையையே கவனித்து வந்துள்ளார்.

கடை வேலை முடிந்ததும் எந்நேரமும், சமூக வலைத்தளத்தில் மூழ்கியுள்ளார். ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், உதவிகள் செய்யும் புகைப்படம், மற்றும் தன்னை அழகாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு பெண்களை கவர்ந்துள்ளார். 

மேலும் செய்திகள்: அட... இது எப்படி உங்களுக்கு தெரியும்?... மாஸ்டர் கார்ட்டூனால் மனம் நொந்த மாளவிகாவை குஷியாக்கிய விஜய் ரசிகர்!
 

இவருக்கு கமெண்ட் செய்யும் பெண்களிடம், வழிய சென்று பேசி.. மெல்ல மெல்ல  நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடம் போன் நம்பர் பெற்று நாள் கணக்கில் பேசி அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, தனிமையில் சந்தித்து, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டது மட்டும் இன்றி, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு இதுவரை 100 க்கும் மேற்பட்ட பலரை இவர் சீரழித்துள்ளதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள்! இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!
 

இவர் மீது, மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காசி பயன்படுத்திய செல் போன், லாப் டாப், மற்றும் இரண்டு ஹார்டு டிஸ்க் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் காசியில் வலையில் பல பெண்கள் சிக்கி இருந்ததாகவும், மேலும் நாகர்கோவிலில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காசி தன்னை காதலித்து சீரழித்து, ஆபாசமாக படம் பிடித்து ஏமாற்றியதாக டாக்டர் பெண்ணை தொடர்ந்து, இன்ஜினீயர் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். இதில் , இரண்டு வருடங்களாக காசியிடம் பழகி வந்ததாகவும். பின்னர் பல இடங்களில் தன்னுடன் சுற்றியுள்ளார் காசி. அவரை தானே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என நானும் அவரை நம்பினேன். 

மேலும் செய்திகள்: அம்மா - மகன் பண்ற காரியமா இது? உடையை மாறி மாறி போட்டு கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட கனிகா! வைரல் வீடியோ!
 

மேலும் அவரச செலவிற்கு பணம் வேண்டும் என தன்னிடம் நகை கேட்டார். ஒரு நிலையில் நான் கொடுத்த நகைகளை திரும்ப கேட்ட போது அவரின் சுயரூபம் வெளியே வந்தது. தன்னுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட, ஆபாசப்படங்களை வைத்து மிரட்டினார். எனவே நான் அவரை விட்டு முழுமையாக விலகிவிட்டேன் என கூறியுள்ளார் அந்த என்ஜினீயர் பெண்.

டாக்டர் பெண், நடிகரின் மகள், தற்போது இன்ஜினீயர் பெண் என அடுக்கடுக்காக காசியின் காம லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.