கரூர் அருகே மனைவியின் கள்ளக்காதலனை கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கரூர் அருகே மனைவியின் கள்ளக்காதலனை கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கரூர் மாவட்டம் குளித்தலை லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கும் மகாதானபுரம் சேர்ந்த தர்மதுரை என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், கதிர்வேலையும் கண்டித்தார். ஆனாலும், இவர்களின் கள்ளக்காதல் நீடித்தது. இந்நிலையில், கதிர்வேல் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் தனியாக பேச வேண்டும் கூறி அழைத்து சென்றனர். 

பின்னர், அங்குள்ள பிள்ளபாளையம் வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்று கதில்வேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பாகங்களை வாய்க்காலில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். வாய்க்காலில் யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது கதிர்வேல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.