சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஆனால், அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில், ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பேராசிரியை அனிதாவை கொலை செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோயில் தெருவில் வசித்து வந்தவர் அனிதா(45). திருமணமாகாத இவர் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 9-ம் தேதி அனிதா மயங்கிய நிலையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.இந்நிலையில் அனிதாவின் உறவினர்கள், அவர் பணியாற்றிய கல்லூரி ஆகிய இடங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் விவரத்தை போலீசார் சேகரித்தனர். இதில், காஞ்சிபுரம் பாண்டபெருமாள் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் பேராசிரியை அனிதாவிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. விசாரணையில் காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய சுதாகர்(42) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஆனால், அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில், ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து கைதான சுகதாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.