நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உடுப்பம்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியரக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர்  அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியம் ஜெயந்தி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக  தகாத உறவு  இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் அங்கன்வாடியில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த அந்த ஊர் பொது மக்கள், அவர்களை கையும் களவுமாக பிடிக்க சரியான சந்திப்பத்திற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில்   அந்த அங்கன் வாடிபணியாளர் ஜெயந்தி அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று வங்கியில் செலுத்திவரும் வேலையை செய்துள்ளார். ஆனால் இன்று ஜெயந்தி பொதுமக்களின் பணம் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பள்ளியில் புகுந்து ஆசிரியர்  சரவணனிடம் ஜெயந்தி குறித்து விசாரித்துள்ளனர் அப்போது  அவர் முறையான பதில் தராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள். ஆசிரியர் சரவணனை சரமாரியா தாக்கியுள்ளனர்.

ஏற்கனேவே பள்ளி மாணவர்கள் முன்பு ஜெயந்தியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட சரவணன் மீது கடுப்பில் இருந்த பொது மக்கள் அவரை அடித்து துவைத்துள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த புதுசத்திரம் போலீசார் சரவனனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்...