இளம்பெண் ஒருவர் 17 பேர் கொண்ட கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் டும்கா பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். நேற்று அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அந்த திடீரென 17 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளது. பின்னர், இளம்பெண்ணை மாறி மாறி 17 பேரும் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்த அந்த நடந்தவற்றை கணவரிடம் கூறி பெண் கதறியடி  அழுத்துள்ளார். 

இதையடுத்து, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் ஒரு பெண் 17 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.