உத்திர பிரதேச மாநிலத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்தவர் அஜய் பால் ஷர்மா. உத்தரபிரதேச சிங்கம் என்றும் அழைக்கப்படுவர். ஏராளமான குற்றவாளிகளை என்கவுண்ட்ரில் போட்டுத் தள்ளியவர் இவர்.

கடந்த மே மாதம் ராம்பூர் பகுதியில் 6 வயது பெண் குழந்தையை  நாசில் என்ற ரவுடி கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். இதையடுத்து தலைமறைவான அவனை போலீசார் தீவிரமாக  தேடி வந்தனர்.

அவனை சுட்டுப் பிடிக்கவும் போலீசார் பிளான் பண்ணியிருந்தனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா தலைமையில் ஓர் தனிப்படை நாசிலை தேடி வந்தது.

இதையடுத்து நேற்று நாசில் ஒரு குடிசைப்பகுதியில் ஒளிந்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவனை நெருங்கி அஜய் பால் ஷர்மா சரண்டர் ஆகும்படி எச்சரித்தார். ஆனால் அவன் தப்பியோட முயன்றான்.

உடனடியாக அவனை அஜய் பால் ஷர்மா மூன்று ரவுண்டு சுட்டார். இதில் நாசில் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மாவின் இந்த  அனைவரும் பாராட்டி வருகின்றனர்.