Asianet News TamilAsianet News Tamil

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடர்கள் ஆன இன்ஸ்டா காதல் ஜோடி ! அதிர்ச்சி சம்பவம்

கோவையில் முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற காதல் ஜோடியை கையும், களவுமாக பிடித்துள்ளனர் பொதுமக்கள்.

Instagram lovers turned robbers got caught in Coimbatore
Author
First Published Aug 13, 2022, 4:08 PM IST

கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த பொம்மணாம்பாளையம் மாரியம்மன்‌கோவில் வீதியில் குடியிருப்பவர் 80 வயதான பெரிய ராயப்பன். இவரது மனைவி ராஜம்மாள்.  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அதேபோல மகள் பெரிநாயக்கன்பாளையம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். 

இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்து உள்ளனர். ராஜம்மாள் வெளியே சென்று இருந்த நிலையில் மதியம் 2 மணியளவில் ஆண், பெண் இருவர் வந்து தனியாக வீட்டில் வெளியில் அமர்ந்து இருந்த பெரிய ராயப்பனிடம் தண்ணீர் கேட்டு உள்ளனர். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற இருவரும் அவரை மடக்கி பிடித்து இருகைகளையும் கட்டி , வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர். 

Instagram lovers turned robbers got caught in Coimbatore

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

பிறகு அதை தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம் நகைகளை தேடி வீட்டை அலாசியுள்ளளனர். நீண்ட நேரத்திற்கு  பின் வீட்டில் கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியில் வெளியேறி உள்ளனர். அப்பொழுது முதியவரின் மருமகள் சென்னையில் இருந்து வந்த பொழுது வீட்டின் பின் பகுதியில் இருந்து வேறு இருவர் சந்தேகிக்கும் வகையில் வருவதை கண்டுள்ளார். அவர்களிடம் நீங்கள் யார், என்று கேட்ட பொழுது முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்து அங்கிருந்து நழுவ முற்பட்டு உள்ளனர்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பெரிய ராயப்பனின் மருமகள் சங்கீதா அவர்களை பிடிக்க முற்பட்டு உள்ளார். அவரை தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பினர். அவர்களை பிடிக்க கூறி சத்தம் எழுப்பி உள்ளார்‌.   உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் விரட்டி உள்ளனர். ஒரு புதரில் பதுக்கிய பெண்ணை லாபகரமாக மடக்கி  பிடித்தனர். 

தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்ட மற்றொரு நபர் தானாக பொதுமக்களிடம் வந்து சேர்ந்தார். இருவருக்கும் ஊர்‌பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.  திருட்டில் ஈடுபட்டது குறித்து வடவள்ளி காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

Instagram lovers turned robbers got caught in Coimbatore

போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த தேவராஜ் மகள் சென்பகவள்ளி என்றும், மற்றொருவர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்றும் தெரிய வந்தது.  இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்து உள்ளனர். நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவரும் உல்லாசமாக வாழ்வும், பல இடங்களுக்கு சுற்றவும் பணம் தேவைப்பட்டது. 

இவர்கள் கிராம பகுதியை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்து குறிப்பிட்ட வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்து வந்து உள்ளனர்.  கொள்ளை அடிக்க யூடுப் பார்த்து அதற்கு சில கூர்மையான ஆயுதங்களான சுத்தி, கயிறு, பிளாஸ்டர் போன்றவைகளை கொண்டு கொள்ளை அடித்து வந்ததாக தெரியவந்து உள்ளது. 

குறிப்பாக பொம்மணம்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்துள்ள பெரிய ராயப்பன்‌ வீட்டை ஒரு வாரத்திற்கு முன்பாக திருட குறி வைத்து இருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios