இன்ஸ்பெக்டர், போலீஸ்கார் நடு ரோட்டில் கட்டிபுரண்டு சண்டை...!!
பொதுமக்கள் சமாதானம்..!!!

  குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடியும்,இவரது கார் டிரைவர் விக்கேஸ்வரனும் பொதுமக்கள் மத்தியில் அடிதடியில் இறங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜான்கென்னடி.இவருக்கும் அவரது கார் டிரைவர் விக்னேஸ்வரனுக்கும் இடையை மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. விக்னேஸ்வரன் ஆயுதப்படை போலீசார். என்பதால் மீண்டும் ஆயுதப்படைக்கு மாறுதலாகிப் போனார். இவர் ஓட்டிய அரசு வாகனத்திற்கு டீசல் கணக்கு வேண்டும் என்பதால் அதற்கான ட்ரிப்சீட்டில் கையெழுத்து வாங்வதற்காக , விளாங்குடியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடியின் வீட்டிற்குச் சென்றார் விக்னேஸ். அங்கே இருவருக்கும் இடையை பேச்சுவார்த்தை தடித்து அடிதடி ஆகும் அளவிற்கு சென்றது. இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதனப்படுத்தினர். இவர்களின் சண்டை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றார்கள்.