மனைவியை கொலை செய்து அவரது தலையை துண்டித்து எடுத்து வந்த கணவன் போலீசாரிடம்  சரண் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்  கலக்கடா பகுதியைச் சேர்ந்த  சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி அம்மாஜி, அதே ஊரைச்ச்சேர்ந்த சமர சிம்மாவோடு தொடரபு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கணவன் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த சமர் சிம்மா அம்மாஜியோடு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

சமர் சிம்மா அடிக்கடி வீட்டிக்கு வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உசேனிடம் இது பற்றி கூறியுள்ளனர். இதனால் தொடர்ந்து மனைவியிடம் சமர் சிம்மாஉடனான கள்ளக்காதலை கைவிடும்படி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில், அம்மாஜியை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை உசேன் அறுத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்துள்ளார். 

இதையடுத்து போலீசார் சம்பவ அதற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வெட்டிய தலையுடன் கணவன் போலீசில் சரணடைந்த சம்வபம் அங்கு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.