சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறி 50 வயது போலி சாமியார் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கற்பழித்த போலி சாமியார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவாவில் 50 வயது நபர் ஒருவர் அந்த பகுதி மக்களிடம் ஆசி வழங்கியும், ஜோசியமும் பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த நபரிடம் பெண் ஒருவர் தனது 14 வயது மகளை கூட்டிக் கொண்டு ஜோசியம் பார்க்க சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என சாமியார் கூறியுள்ளார். இதனை நம்பி தனது மகளை போலி சாமியாரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவதாக கூறி சிறுமியின் தாயின் ஒத்துழைப்போடு சிறுமியை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் தாய் கைது

இந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலி சாமியார் மீது சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோவாவில் உள்ள திவிம் பகுதியின் கான்சா கிராமத்தில் வைத்து போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் போலி சாமியாருக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துணைக் காவல் கண்காணிப்பாளர் (மபுசா) ஜிவ்பா தல்வி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருடன் உடந்தையாக இருந்ததற்காக சிறுமியின் 43 வயது தாயும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் கோவா குழந்தைகள் சட்டம், 2003 ஆகியவற்றின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

என் புருஷனை கொல்லுடா.. நாம சந்தோஷமா வாழலாம்.. கள்ளக் காதலனுக்கு ஸ்கெச் போட்டு கொடுத்த மனைவி.