ஓயாமல் டார்ச்சர்! உல்லாசத்தின் போது ஆண் உறுப்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலி? இறுதியில் நடந்த சோகம்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி கொண்டு மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார். இதை திருப்பி கேட்ட போது முத்துகுமார் தர மறுத்துள்ளார்.
கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (30). இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் கூலி வேலை செய்து இரு பிள்ளைகளை கவனித்து வந்தார். இந்நிலையில், முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி கொண்டு மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார். இதை திருப்பி கேட்ட போது முத்துகுமார் தர மறுத்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான காட்டுப்பகுதிக்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது, மகேஸ்வரி பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை இடுப்புக்கு கீழ் பகுதியில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால், படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி மகேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.