கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் என்ஜினீயர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளம்பெண்ணின் கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் என்ஜினீயர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளம்பெண்ணின் கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழியை சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு விதவை பெண்ணான அழகுமணி என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சக்திவேல் பெங்ளூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி கோவையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சக்திவேலுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து, சக்திவேல் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேரம் கிடைக்கும் போது மட்டும் அக்காவிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். கடந்த சில மாதங்களாக சக்திவேல் அவரது அக்காவிடம் பேசவில்லை. இதனையடுத்து, சந்தேகம் அடைந்த அக்கா தனது மகனை கோவைக்கு அனுப்பி வைத்தார். 

கோவைக்கு வந்த தினேஷ் சக்திவேலின் வீட்டிற்கு சென்று பார்த்த போது உடல் தீயில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தினேஷ் இது குறித்து உடனே குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலுக்கு அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுடம் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. தனிமையில் இருக்கும் போது இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது நாளடைவில் கணவருக்கு தெரிய வரவே அவர் சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு எரித்து கணவருக்கு தெரிய வரவே அவர் சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் சக்திவேல் எரித்து கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.