நேற்றிரவு விக்டோரியா வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் பத்மநாபன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதேசமயம் விக்டோரியாவும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 

பழநி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (35). இவர் மடத்துக்குளத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்லமணி என்ற மனைவியும், காவ்யா(12), காவ்யஸ்ரீ (10) என்ற குழந்தைகளும் உள்ளனர். அதே கம்பெனியில் சின்னக்கலையம்புத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த விக்டோரியா ( 45) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் அய்யனார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விக்டோரியா கணவரை பிரிந்து சமத்துவபுரத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். அய்யனார் வால்பாறையில் வசித்து வருகிறார். 

 இந்நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் பத்மநாபன், விக்டோரியா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு பத்மநாதன் விக்டோரியாவை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு விக்டோரியா வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் பத்மநாபன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதேசமயம் விக்டோரியாவும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்டோரியா உடல் அருகே கிடந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். மேலும், விக்டோரியாவுக்கு மேலும் ஒருவருடன் தொடர்பு இருந்திக்கலாம். கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பத்மநாபன் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதனை கேள்விப்பட்டு விக்டோரியா தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலன் குத்தி கொலை செய்யப்பட்டது. கள்ளக்காதலி தூக்கில் பிணமாக தொங்கியது பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.