கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய புருஷனை போட்டு தள்ளிவிட்டு.. மனைவி செய்த காரியம்.!
புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (28). இவரது மனைவி மேரி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. வழக்கம் போல தம்பதி கடந்த 5ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது கணவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து விட்டு நாகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (28). இவரது மனைவி மேரி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. வழக்கம் போல தம்பதி கடந்த 5ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது கணவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இதையும் படிங்க;- கிராமத்தில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய 3 இளம்பெண்கள்.. கல்லா கட்டிய தம்பதி கைது
அப்போது, அவரது உடல் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் பிரான்சிஸ் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்ட போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுபற்றி போலீஸ் கூறுகையில்;- பிரான்சிஸ் மனைவி ஜனோவா மேரிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் கணேசன் (26) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் பிரான்சிஸ்க்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனைவி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க;- ப்ளீஸ் வேணாம் என்னை விட்டுடுங்க.. கதறியும் விடாமல் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த காதலன்.!
இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் தூங்கிக்கொண்டிருந்த பிரான்சிஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினரிடம், 2 பேர் பிரான்சிஸ் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக மேரி மற்றும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.