அண்ணியுடன் கள்ளத்தொடர்பு... அண்ணனை போட்டுதள்ளிவிட்டு 6 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி..!

கணவனை 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்து புதைத்துவிட்டு அவரது தம்பியுடன் வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

illegal love... wife arrest

கணவனை 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்து புதைத்துவிட்டு அவரது தம்பியுடன் வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த முருகதாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுனிதாவுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த முருகதாசன், கடந்த 2013-ம் ஆண்டு அவரது விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்தார். அதன்பின் அவரைக் காணாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அவர் கிடைக்காத நிலையில், முருகதாஸ் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாக, அவரது மனைவி சுமிதா கூறியுள்ளார்.illegal love... wife arrest

அதபின் சுமிதாவும், முருகதாஸின் தம்பி சுமேரும் திடீரென தலைமறைவாகினர். அவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், முருகதாசனின் தாய் பவுனம்மாள் வீட்டை சுத்தம் செய்யும் போது அவரது பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. முருகதாஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று அறிந்த தாய், காவல்துறையிடம் பாஸ்போர்ட்டை அளித்துள்ளார். illegal love... wife arrest

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் தலைமறைவாக இருந்த சுமிதாவும், சுமேரும் கேரளாவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. அதாவது, சுமிதாவுக்கும் முருகதாசின் சகோதரரான சுமேருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய முருகதாஸ் கண்டித்துள்ளார்.  illegal love... wife arrest

இதனால், ஆத்திரமடைந்த மனைவி சுமிதாவும், அவரது தம்பி சுமேரும் இணைந்து கொலை செய்து, வீட்டிலேயே புதைத்துவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டதாக நாடகமாடியதும் அம்பலமானது. பிறகு சுமிதாவையும், சுமேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முருகதாசின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. கணவனையே 6 ஆண்டுகளுக்கு முன் மனைவி கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios