Asianet News TamilAsianet News Tamil

நினைக்கும் போதெல்லாம் கண்டவனுடன் உல்லாசம்.. தடையாக இருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற காமவெறி பிடித்த தாய்.!

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் பிரிந்து சென்ற பிறகு, 2-வது மகன் நித்தினுடன் கீதா தனியாக இருந்தார். கணவரின் பிரிவுக்கு பிறகு கீதாவுக்கு பல நபர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது. 

illegal love..one year old boy murder case...mother arrested
Author
Neelagiri, First Published Mar 26, 2022, 1:30 PM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொடூரமான முறையில் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (40). இவரது மனைவி கீதா(38). இவர்களுக்கு நித்தீஷ்(3), நித்தின்(1) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் மூத்த மகன் நித்தீசுடன் கோவையிலும், கீதா 2-வது மகனுடன் ஊட்டியிலும் வசித்து வந்தனர். கடந்த மாதம் 15ம் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததையடுத்து  கீதா ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க;- அண்ணன் வெளிநாட்டுக்கு சென்ற கேப்பில் அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. ஏற்காட்டு ரூமில் நடந்த ஏடாகுடம்.!

illegal love..one year old boy murder case...mother arrested

இது தொடர்பாக போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதும், குழந்தையின் உணவுக்குழாய் பகுதியில் கிழங்குகள், அரிசி உள்ளிட்டவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து கீதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

கீதா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்தவர். அந்த திருமண வாழ்க்கையில் மனகசப்பு ஏற்படவே அவர்கள் 2 பேரையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார். அந்த சமயம் தான் சமூகவலைதளம் மூலம் கார்த்திக்கின் அறிமுகம் கிடைக்க அவருடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் பிரிந்து சென்ற பிறகு, 2-வது மகன் நித்தினுடன் கீதா தனியாக இருந்தார். கணவரின் பிரிவுக்கு பிறகு கீதாவுக்கு பல நபர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது. 

இதையும் படிங்க;- இந்த வயசுலேயும் இப்படி ஒரு விரீயமா? 28 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 80 வயது கிழவன்..!

illegal love..one year old boy murder case...mother arrested

குழந்தையை கொலை செய்ய வேண்டும். ஆனால், போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக தினந்தோறும் குழந்தையை அடித்து துன்புறுத்தினார். சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்காமல் அரிசியை எடுத்து வாயில் போட்டு தண்ணீரை ஊற்றுவது, பச்சை கிழங்கை வாங்கி அதனை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது, மது வாங்கி வந்து வாயில் ஊற்றுவது என தினம் தினம் குழந்தையை சித்ரவதை செய்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி வீட்டில் உள்ள தொட்டிலில் நித்தின் தூங்கி கொண்டிருந்தான். இது தான் தக்க சமயம் மகனை கொன்று விட்டு, தொட்டிலில் இருந்து கீழே விழுந்து போல நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இதையும் படிங்க;- நினைக்கும் போதெல்லாம் பல நடிகைகளுடன் உல்லாசம்.. பணத்தை தண்ணீராய் வாரி இறைத்த நீராவி முருகன்.. அதிர்ச்சி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios