தாயின் கள்ளத்தொடர்பால் ஆத்திரமடைந்த மகன் தாய் மீது அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கள்ளத்தொடர்பால் ஆத்திரமடைந்த மகன் தாய் மீது அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வஞ்சி மலர். வஞ்சிமலர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து வஞ்சி மலர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 19 வயதில் ஓம் சக்தி என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில், கணவரை பிரிந்து பிறகு, பல வருடங்களாக செல்லூர் பகுதியில் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது, கேட்டரிங் வேலைக்கு வஞ்சி சென்று வந்துள்ளார். கேட்டரிங் வேலைக்கு சென்ற இடத்தில் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் அடிக்கடி தொலைபேசியில் கள்ளக்காதலுடன் வஞ்சி மலர் பேசி வந்துள்ளார்.

இதை கல்லூரியில் படிக்கும் மகன் ஓம்சக்தி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் , தாய் வஞ்சிமலர் கேட்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் இருந்த ஓம் சக்தி வழக்கம் போல வஞ்சிமலர் கள்ளக்காதலுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த ஓம் சக்தி தூங்கி கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். பின்னர், மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கல்லூரி மாணவர் ஓம் சக்தியை கைது செய்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த வஞ்சிமலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.