கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (37). அரசு பள்ளியில் கணித ஆசிரியர் திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 29ஆம் தேதி மதியம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் காட்டுப்பகுதியில் சிவகுமாரின் கை, கால்கள் கட்டப்பட்டு லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது இதில் கூலிப்படையினர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் சிவகுமார் 3க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பாக ஊத்தங்கரையை சேர்ந்த லட்சுமி என்பவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இந்த விவகாரம் நாளடைவில் ஆசிரியரின் கணவர் இளங்கோவுக்கு தெரியவந்தது. இதனால், ஆசிரியர் சிவகுமார் கண்டித்துள்ளார். ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்டகவில்லை. இந்நிலையில், ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலிப்படை தலைவன் லாரி உரிமையாளருமான வெள்ளைச்சாமியிடம் ஆசிரியர் சிவகுமார் கை கால்களை உடைக்கம் படி ஒரு லட்சம் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து, கூலிப்படையினர் கடந்த 29ம் தேதி காலை ஊத்தங்கரை அடுத்த ஜோதி நகர் அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை வழிமறித்த 9 பேர் கொண்ட கும்பல் சொகுசு காரில் கடத்தி சென்று கை, கால்கள் மற்றும் கழுத்து பகுதியில் நாடாவால் கட்டி இறுக்கி பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் காட்டுப்பகுதியில் ரயில்வே ரோடு அருகே கீழே தள்ளிவிட்டு அவர் தலை மீது லாரியை ஏற்றி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக லட்சுமி கணவர் இளங்கோ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.