கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் பெண் அவரது காதலருடன் தற்கொலைக்கு முயற்சி சம்பவத்தால் இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் பெண் அவரது காதலருடன் தற்கொலைக்கு முயற்சி சம்பவத்தால் இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எஸ்ஆர் நகரில் வசிக்கும் 25 வயதான திருமணமான பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுடன் பணிபுரியும் இளைருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவருக்கு தெரியாமல் அடிக்கடி காதலனுடன் அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த இரு வாலிபர்கள் பார்த்து விட்டனர்.

கடந்த டிசம்பர் 13ம் தேதி அந்த பெண் தன் காதலனை சந்திக்க தனியாக சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணை வழிமறித்து என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தை கணவரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன அந்த பெண் வாலிபர்களின் ஆசைக்கு இணங்கினார். மறைவாக இடத்திற்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.

இதனையடுத்து, நடந்த சம்பவத்தை கூறி கள்ளக்காதலனிடம் கூறி பெண் கதறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது காதலருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி விழுவதற்கு முன் அந்த பெண்ணின் காதலர் இதுகுறித்து உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்ததையடுத்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
