சந்தோசும், பரசுராமும் நண்பர்கள். இதனால் சந்தோஷ் வீட்டிற்கு பரசுராம் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பரசுராமுக்கும், சந்தோசின் மனைவி சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை கொன்று உடலை எரித்த நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல்
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சிந்தகடா பகுதியில் வசித்து வந்த சந்தோசும், பரசுராமும் நண்பர்கள். இதனால் சந்தோஷ் வீட்டிற்கு பரசுராம் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பரசுராமுக்கும், சந்தோசின் மனைவி சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் கணவர் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவர் சந்தோஷிற்கு தெரியவந்தது.
இதையும் படிங்க;- அரை நிர்வாணத்துடன் அடிக்கடி வீடியோ கால்.. தடையாக இருந்த பொண்டாட்டியை போட்டு தள்ளிய கணவர்?

துண்டால் கழுத்தை இறுக்கி கொலை
இதனால், பரசுராமிடம், சந்தோஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சந்தோசை தீர்த்துக்கட்ட பரசுராம் திட்டமிட்டார். கடந்த 1-ம் தேதி சந்தோசை சந்திக்க கனகரகி கிராமத்திற்கு பரசுராம் வரவழைத்தார். பின்னர் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறிய சந்தோஷை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நிலத்தில் உடலை வீசிவிட்டு உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உள்ளார்.
இதையும் படிங்க;- சீக்கிரம் வாங்க.. 17 வயது மகளை 52 வயது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான பகீர் தகவல்.!

போலீஸ் கைது
அந்த தீ விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் மீது பரவி எரிந்ததும் அங்கிருந்து பரசுராம் தப்பித்துவிட்டார். நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சந்தோஷ் உயிரிழந்தது போல நம்ப வைக்க இதுபோன்று செய்தார். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை கொலை செய்த பரசுராமை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலையில் மனைவிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
