சென்னை அருகே மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பரை மதுவாங்கி கொடுத்து கணவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொட்டிவாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஜெகன் (வயது 39), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி மாலதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த நாகராஜ் மனைவி மற்றும் ஜெகனை பல முறை கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தது. இதனால் நாகராஜுக்கும் ஜெகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெகனை போட்டுத்தள்ள நாகராஜ் திட்டமிட்டார்.

 

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி  ஜெகனை சமாதானம் பேசுவதற்காக நாகராஜ் தனது நண்பரான மாரிமுத்து மூலம் அழைத்து இருக்கிறார். இதனையடுத்து கோவளம் கடற்கரையில் 3 பேரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அங்கு ஜெயகனுக்கு போதை தலைக்கேறியதும் நகராஜ் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலைக்கு உதவியதாக நண்பர் மாரிமுத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.