40 வயதில் கள்ளக்காதல் தேவையா? உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட பெண்.. எப்படி தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தமிழ்மணி (40). இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, தமிழ்மணி தன் கணவன் மற்றும் மகன்களைப் பிரிந்து 3 ஆண்டுகளாக கீழவாடியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். 

illegal love affair...Women Murder.. boyfriend Arrest

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கள்ளக்காதலி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தமிழ்மணி (40). இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, தமிழ்மணி தன் கணவன் மற்றும் மகன்களைப் பிரிந்து 3 ஆண்டுகளாக கீழவாடியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தமிழ்மணி வேலை செய்தபோது அங்கு பணியாற்றி வந்த செல்வராஜ் மகன் செந்தில் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, தமிழ்மணி செந்திலுடன் பாலுாரான்படுகையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அடிக்கடி தமிழ்மணி - செந்தில் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த செந்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், படுகாயமடைந்த தமிழ்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுதத்து, தமிழ்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios