விழுப்புரம் அருகே மனைவியின் தங்கையுடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகே மனைவியின் தங்கையுடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது குயிலாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (33). இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அருணாவின் தங்கை சீதா (26). இவர் தனது அக்காவின் வீட்டு அருகே வசித்து வந்தார். இந்நிலையில் சீதாவுக்கும், பன்னீருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்தனர். 

இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக கணவரையும், தங்கையையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் பன்னீர் குற்ற உணர்ச்சியுடன் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் தனிமையில் இருந்த போது பன்னீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அருணா கூச்சலிட்டுள்ளார். 

இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதற்கிடையே பன்னீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் அருணாவின் தங்கை சீதாவுக்கு தெரிய வந்தது. தான் செய்த தவறால் தான் அக்கா கணவன் இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியில் சீதாவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து, உறவினர்கள் சீதாவின் வீட்டுக்குள் சென்று அங்கு தூக்கில் தொங்கிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.