Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதல்.. கரும்புக்காட்டில் வைத்து மனைவி கொன்ற கணவன்! எப்படி தெரியுமா?

பாண்டியன் மது போதைக்கு அடிமையானதால் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிடும் போதெல்லாம் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.

illegal love affair...Husband killed his wife viluppuram in tvk
Author
First Published Nov 23, 2023, 2:17 PM IST | Last Updated Nov 23, 2023, 2:19 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் கரும்புக்காட்டில் வைத்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்மருதூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர்(45). இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பாண்டியன் மது போதைக்கு அடிமையானதால் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிடும் போதெல்லாம் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.

இதையும் படிங்க;- ஹோமோ செக்ஸ்க்கு நோ சொன்ன வாலிபர்.. விரீயம் மருந்து கொடுத்து வேலை முடிந்ததும் கதை முடித்த சித்த வைத்தியர்.!

இந்நிலையில் கண்டமங்கலம் எல்லை பகுதியில் உள்ள ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் மலர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் மாடு மேய்த்தவர் மூலம் ஊர் முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கணவனே மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்த பாண்டியனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசாரிடம் விசாரணை நடத்திய போது எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால் மனைவியை கரும்பு காட்டில் வைத்து அவரது சேலையாலே கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios