கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கடவூர் சேவாப்பூரைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவருக்கு திருமணமாகி சோலையம்மாள் என்ற மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, ராமசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (55) என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

கரூர் அருகே பேச மறுத்த கள்ளக்காதலியை தூக்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக வென்றக்கொண்ட 70 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கடவூர் சேவாப்பூரைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவருக்கு திருமணமாகி சோலையம்மாள் என்ற மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, ராமசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (55) என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பழனியம்மாள் ராமசாமியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி நேற்று நள்ளிரவு அரிவாளுடன் பழனியம்மாள் வீட்டுக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்த போதே சரமாரியாக வெட்டியிள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலி பேசாததால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.