Asianet News TamilAsianet News Tamil

ஐஐடி மாணவியை இருட்டில் வைத்து பலான இடங்களில் கை வைத்து வக்கிரம்.. கேண்டின் ஜூஸ் மாஸ்டர் கைது.

சென்னை ஐஐடி மாணவியிடம் அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் விவகாரத்தில் அந்த வளாகத்தில் உள்ள கேன்டீனில் ஜூஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

IIT student kept in the dark and sexually harassed.. Canteen juice master arrested.
Author
Chennai, First Published Aug 2, 2022, 5:36 PM IST

சென்னை ஐஐடி மாணவியிடம் அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் விவகாரத்தில் அந்த வளாகத்தில் உள்ள கேன்டீனில் ஜூஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் ஜூஸ் மாஸ்டர் சந்தன் குமார் என்றும் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி நள்ளிரவில் பள்ளி மாணவி ஒருவர் தான் தங்கியிருக்கும் விடுதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருள் சூழ்ந்த கேண்டீன் பகுதிக்கு அந்த மாணவியை இழுத்துச் சென்ற மர்ம நபர், மாணவியின் அந்தரங்க பகுதிகளில் கைவைத்து பாலியல் வக்கிர செயல்களில் ஈடுபட்டார். இருட்டில் ஒன்றும் தெரியாமல் திகைத்த மாணவி, அய்யோ யாராவது என்னை காப்பாற்றுங்கள் என உதவி கேட்டு அலறினார், ஆனால் அருகில் யாரும் இல்லாததால் உதவி கிடைக்கவில்லை.

IIT student kept in the dark and sexually harassed.. Canteen juice master arrested.

ஆனால் ஒரு வழியாக போராடி அந்த மாணவி அந்த மர்ம நபரிடம் இருந்து தப்பினார், பிறகு தனது விடுதிக்கு சென்ற அவர், தனக்கு நேர்ந்த நிலை குறித்து கூறி சக மாணவிகளிடம் கதறி அழுதார், பின்னர் அந்த மாணவியின் தோழியின் மூலமாக இந்த தகவல் வெளியானது. இச்சம்பவம் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் ஐஐடி வளாகத்திற்குள் சென்று ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஐஐடி  நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஐஐடி வளாகம் என்பது 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் உள்ளது என நிர்வாகம் கூறியது,

இதையும் படியுங்கள்: குடியரசு தலைவர் விருது வேண்டுமா..? ரூ.2லட்சம் தந்தால் விருது...கோவையில் மோசடி மன்னன் கைது..சிக்கியது எப்படி.?

ஆனாலும்  இரவு நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் Buddy System செல்போன் செயலி முறை போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகள் மாணவர்களுக்கு வழங்கி இருப்பதாகவும் நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் குறித்து பலரும் பல வகையில் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் ஐஐடி வளாகத்திற்குள் சென்று அங்கு பணியாற்றும் வடமாநில இளைஞர் உள்ளிட்ட 300  அதிகமானோரின் புகைப்படங்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தினர்.

IIT student kept in the dark and sexually harassed.. Canteen juice master arrested.

ஆனால் அணிவகுப்பு இரவில் நடந்ததால் மாணவியால் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை, இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக கோட்டூர்புரம் போலீசார் புகார் பெற்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தம் குமார் (24) என்ற  நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தன் குமார் ஐஐடி வளாகத்தில் ஜூஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

இதையும் படியுங்கள்: வரும்போதே பிணமாக வந்த ஸ்ரீமதி.. வேனை டிரைவரிடம் கொடுத்து ஒதுங்கிய ரவிக்குமார், மருத்துவமனை ரிப்போர்ட் பகீர்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios