நாற்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நாள் முழுவதும் பெண்ணுடன்  உல்லாசம் அனுபவிக்கலாம் என பலருக்கு வலைவிரித்த கும்பலை போலீசார் தந்திரமான மடக்கி பிடித்துள்ளனர்.   இந்தியாவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவிற்கு மும்பையில் பாலியல் தொழில் அதிக அளவில்  நடந்து வருகிறது.   சாதாரண ஏழை எளிய பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் ,  தற்போது வெளிநாட்டு கல்லூரி மாணவிகளும் அதிக அளவில் பணத்திற்காக இத்தொழிலில்  ஈடுபட்டு வருகின்றனர் . 

40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும்  நாள்முழுக்க பாலியலுக்கு பெண்கள் வழங்கப்படுவர், என மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அதுவும் அதை பாலிவுட் திரைப்படத்தில் மேனேஜர் ஒருவரும் இயக்குனரும் இணைந்து  தொழிலை நடத்தி வருவதாக தகவல் வந்ததையடுத்து மும்பை அந்தேரி கிழக்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர் .  அதில் சிலரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் . அத்துடன் அத்திரைப்பட மேலாளர் மற்றும் இயக்குனரிடத்திலிருந்து 3 பெண்களை போலீசார் மீட்டனர் .  அவர்கள் துர்க்மெனிஸ்தான் நாட்டைச்  சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் என்பது தெரியவந்தது 

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கல்லூரி மாணவிகளை இதில் அவர்கள்  ஈடுபடுத்தி வந்ததாக  விசாரணையில் தெரியவந்தது இந்த கும்பலை பிடிக்க போலீசார் வாடிக்கையாளரை போல நடித்து  அந்த கும்பலை நெருங்கியதுடன்,   நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் நாள் முழுக்க பெண்களை உல்லாசம் அனுபவிக்கலாம் என அவர்கள் போலீசாரிடம் பேரம்பேசியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  அதேபோல் வெளிநாட்டுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதாக  ஆசை வார்த்தை கூறி  இளம்பெண்களையும் பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்தி வந்ததும்  விசாரணையில் தெரியவந்துள்ளது .