கள்ளகாதலனுக்காக குழந்தையை அடித்து சித்திரவதை செய்தேன்.. சைகோ பெண் பகீர் வாக்கு மூலம்.. அதிர்ச்சியில் போலீஸ்.
இதனையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் கொடுத்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆந்திர மாநிலத்தில் இருந்த துளசியை கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட பிரச்சினையால்தான் குழந்தையை தாக்கி சித்திரவதை செய்ததாக விழுப்புரம் பெண் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (26) கூலி தொழிலாளியான இவர், ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுக்கா ராம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(4) மற்றும் பிரதீப்(2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவர் இல்லாத நேரத்தில் துளசி தனது கணவன் மீது உள்ள கோபத்தை குழந்தைகள் மீது வெளிப்படுத்தி வந்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாக தாக்கியதுடன் அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். இதில் படு காயமடைந்த குழந்தையை அவரே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தைக்கு எதனால் இப்படி காயம் ஏற்பட்டது என கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது செல்போனை ஆராய்ந்ததில் அதில் குழந்தைகளை துளசி கடுமையாக தாக்கும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் குழந்தையை துளசி காலனியாளும், கைகளாலும் கடுமையாகத் தாக்கியும், குழந்தையின் காலை முறிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருப்பது சமூகவலைதளத்தில் பரபரப்பானது. இந்நிலையில் குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தாய் ராணி ஆந்திர மாநிலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது, தற்போது குழந்தைகள் தந்தை வடிவழகனின் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தாய் குழந்தைகளை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அது மக்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த கொடூர பெண்ணை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் கொடுத்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆந்திர மாநிலத்தில் இருந்த துளசியை கைது செய்துள்ளனர். நிலையில் துளசி இடத்தில் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் குழந்தையை தாக்கியதாகவும், தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பிரேம்குமாரை பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.