மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்.. வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

 சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தத போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித்குமார்  கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசுக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக ரஞ்சித்குமார் இறுதி சடங்குகளை செய்ய முயற்சித்துள்ளார். 

husband who became a drama after killing his wife in chengalpattu

செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுதாமதி (25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் மற்றும் 2 வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தத போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித்குமார்  கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசுக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக ரஞ்சித்குமார் இறுதி சடங்குகளை செய்ய முயற்சித்துள்ளார். 

இதையும் படிங்க;- பழிக்கு பழி.. சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஷாக்கிங் நியூஸ்.. 4 பேர் கோர்ட்டில் சரண்..!

ஆனால், இதற்கு சுதாமதியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சுதாமதியின் அண்ணன் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதாமதி தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

இதையும் படிங்க;-  கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை  தெரிவித்தார். ரஞ்சித் குமார் வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது,  சுதாமதி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சுதாமதியின் தலையில் பலமாக தாக்கியதில் படுகாயமடைந்து மயங்கினார். இதனையடுத்து, அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கியதில் சுதாமதி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-   அடகடவுளே.. 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்று பாராமல் வரதட்ணை கேட்டு ஓயாத டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த பெண்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios