அடகடவுளே.. 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்று பாராமல் வரதட்ணை கேட்டு ஓயாத டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த பெண்..!

புருஷோத்தமன் மற்றும் அவரது தந்தை பழனிவேல் ஆகிய இருவரும் ஐஸ்வர்யாவை தாய் வீட்டில் வரதட்சணையாக பணம் வாங்கி கொண்டு வரசொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

Dowry cruelty...9 months pregnant women Suicide in cuddalore

வரதட்ணை கேட்டு கொடுமை படுத்தியதால் 9 மாத நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நல்லூர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (22). இவரது கணவர் புருஷோத்தமன் (23. இருவரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது, ஐஸ்வர்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது கணவர் புருஷோத்தமனுக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தததாக  கூறப்படுகிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவரிடம் தட்டிகேட்டுள்ளார். 

இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!

Dowry cruelty...9 months pregnant women Suicide in cuddalore

அப்போது புருஷோத்தமன் மற்றும் அவரது தந்தை பழனிவேல் ஆகிய இருவரும் ஐஸ்வர்யாவை தாய் வீட்டில் வரதட்சணையாக பணம் வாங்கி கொண்டு வரசொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளியன்று புருஷோத்தமன் வெளியே சென்றவர், இரவு லேட்டாக வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்ட போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்.. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

அப்போது, வரதட்ணையாக பணம் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தியதால், ஐஸ்வர்யா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

Dowry cruelty...9 months pregnant women Suicide in cuddalore

பின்னர், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற அரசு மருத்துவ குழுவினர் ஆபரேசன் மூலம் வயிற்றில் இருந்த பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால், மூச்சுதிணறல் ஏற்பட்டு குழந்தையும் உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் கணவர் புருஷோத்தமன் மற்றும் மாமனார் பழனிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைத்த மகள் வேறு சாதி பையனுடன் காதல் திருமணம்.. விபரீத முடிவு எடுத்த தாய், தந்தை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios