மனைவிக்கு பல ஆண்களுடன் தகாத உறவு இருந்தாதால், கணவன், தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிவானந்தாபுரத்தில் வசித்து வரும் அர்ஜுன், மனைவி அலமேலு இருவருக்கும் யூகாஷ் 14, என்ற மகனும் உள்ளார்.  இந்நிலையில் அலமேலு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொருவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. 

இந்த தொடர்புநாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல, அவரது செல்போனில் பல ஆண்களின் போன் நம்பர் இருந்துள்ளது. அவர்களுடனும் தகாத உறவில் இருந்துள்ளதாக சந்தேகப்பட்ட கணவன் அர்ஜுன் பலமுறை எச்சரித்தும், கெஞ்சியும் கேட்டுள்ளார். ஆனால், கணவனின் பேச்சைக் கேட்காத அவர் தனது ஆன் நண்பர்களுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை,  இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு மனைவி அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் முழுவதும் செக்ஸ் மெஸேஜ் மற்றும் ஆபாச படங்களாக இருந்தல்லதைப் பார்த்து அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் செக்ஸ் உரையாடல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன்  

இதனால் மனமுடைந்த அர்ஜுன், இனி உயிரோடு இருக்க வேண்டாம்,  தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் தனது மகன் யுகாஸ்க்கு தேனில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தன் மகன் இறந்த பிறகு, அர்ஜுன் அங்கிருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அலமேலு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்பட்ட நிலையில் உடனே அருகில் உள்ளவர்களும் தகவல் தெரிவித்துள்ளார், இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அனைவரும் வந்து கதவைத் தட்டி பார்த்துள்ளனர். கதவு திறக்கப்பட்ட நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால் தனது மகன் இறந்த நிலையிலும் தன் கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது மனைவி அலமேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.