காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளார். இந்த நிலம் விற்பனை செய்வது தொடர்பாக செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

குன்றத்தூர் அருகே கடந்த 2015ம் ஆண்டு மனைவி முன்பாக கணவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளார். இந்த நிலம் விற்பனை செய்வது தொடர்பாக செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று செல்வம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து ராஜ்குமாரும், அவரது நண்பர்களான கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மனைவி கண் முன்பாகவே செல்வத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். கடந்த 2015ம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வழக்கு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.இளங்கோவன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் ராஜ்குமார்,கோதண்டம் , சந்திரன் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.