திண்டுக்கல் மாவட்டத்தில் கணவனின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவனையே கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வட பருத்தியூரைச் சேர்ந்தவர் நாட்டு துரை. விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி கருப்பாத்தாள். இருவருக்கும் சில நாட்களாக குடும்ப பிரச்சனையில் அடிக்கடி சண்டை போட்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் நாட்டு துரை மனைவியிடம் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் மனைவி கருப்பாத்தாள் தற்காப்புக்காக கணவரிடம் இருந்த அரிவாளை பிடுங்க முயற்சித்த போது கணவர் மீண்டும், மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொருமை இழந்த கருப்பாத்தாள், கணவர் நாட்டுத் துரையை சரமாரியாக வெட்டியதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்ய துரத்தும் பெற்றோர்; புதுமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்த நாட்டுதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கொலை செய்த மனைவி கருப்பாத்தாளை கீரனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசந்து தூங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்; டேங்கை நிரப்பிக்கொண்டு ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்