கணவன் சிறையில் உள்ள நிலையில் வேறு ஒரு இளைஞருடன்  அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் சிறையில் உள்ள நிலையில் வேறு ஒரு இளைஞருடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில், பட்லி பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம்நடந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் குற்றச் சம்பவம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் இல்லாததால் அந்தப் பெண் உள்ளூரில் உள்ள ஒரு இளைஞருடன் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விஷயம் ஊர் கிராம மக்களுக்கு தெரிந்தது. அது குறித்து அவர்கள் இருவரையும் பலமுறை அவர்களை எச்சரித்தனர்.

ஆனாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞனுடன் அந்த பெண் தனது வீட்டில் உல்லாசத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களின் வீட்டை சோதனையிட்ட ஊர்மக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. உடனே சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கொடுமைப்படுத்திய 50க்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.