மகன் சீனிவாசன் ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவது போலவும், மகள் கிருஷ்ணபிரியா தரையில் சடலமாக கிடப்பதையும் காட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க, எங்கள கொல்லணும்னு முடிவு பண்ணீங்க, கொன்னுட்டீங்க. இந்தா பாத்துக்கோங்க, என முருகன் பேசியுள்ளார். இதனையடுத்து, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். 

மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தனது இரண்டும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா மங்களப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (33), இவர், சேலம் மாவட்டம் சங்ககிரியில் குப்பனூர் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் கடந்த 13 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே மனைவி முருகேஸ்வரி, மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணபிரியா (6) ஆகியோருடன் வசித்தார். முருகேஸ்வரியும் சில ஆண்டுகளாக அதே ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, முருகன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அந்த நபருடன் உள்ள தொடர்பை முருகேஸ்வரி கைவிடவில்லை. இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியில் கள்ளக்காதல் விவகாரத்தால் முருகன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் முருகன், நேற்று முன்தினம் மாலை மகன் சீனிவாசன், மகள் கிருஷ்ணபிரியா ஆகியோருடன் காய்கறி வாங்கி வருகிறேன் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். இதனையடுத்து, சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனிடையே இரவில், முருகனின் செல்போனில் இருந்து அவரது உறவினர்களுக்கு ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், மகன் சீனிவாசன் ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவது போலவும், மகள் கிருஷ்ணபிரியா தரையில் சடலமாக கிடப்பதையும் காட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க, எங்கள கொல்லணும்னு முடிவு பண்ணீங்க, கொன்னுட்டீங்க. இந்தா பாத்துக்கோங்க, என முருகன் பேசியுள்ளார். இதனையடுத்து, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். 

இந்த வீடியோவை பார்த்து பதறிய உறவினர்கள், சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், சங்ககிரி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள மாந்தோப்பில் மருகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து, 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவி கள்ளத்தொடர்பை கைவிடாததால், இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.