சென்னையில் குடும்பத்தகராறில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டாவது மனைவி மீது மின்சாரம் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் குடும்பத்தகராறில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டாவது மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை வண்ணாரப்பேட்டையை நைனியப்பன் கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான்(47). டெய்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியில் வசித்து வருவதாகவும் அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளதாக கூறப்படுகிறது. 2வது மனைவியான ஆசினா பேகத்திற்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஷாஜகான் முதல் மனைவியை நன்கு கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆசீனா பேகம் அடிக்கடி ஷாஜகானிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு படுக்கை அறையில் ஆசீனா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசீனா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் ஆசீனா கணவர் ஷாஜகானிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 

இறுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக தூங்கிக் கொண்டிருந்த ஆசீனா பேகத்தின் கையில் மின் வயர் மூலம் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் ஷாஜகான் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.