குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள்   தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இதனையடுத்து, கணவர் பாலகிருஷ்ணாவை கைது செய்து மற்ற பாகங்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சந்தியாவின் இடுப்பு, முழங்கால் பாகங்களை அடையாறு ஆற்றில் கண்டெடுத்துள்ளனர். எனினும் சந்தியாவின் தலை உட்பட உடலின் மீத பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

விசாரணையில் பாலகிருஷ்ணன் கூறுகையில்; சந்தியாவை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்தால் ரத்தம் கொட்டும் என்பதால் பேப்பர் கட்டிங் மெஷினை பயன்படுத்தி உடலை வெட்டினேன். சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டி, அந்த உடல் பாகங்களை 4 கவர்களில் போட்டு  பல்வேறு இடங்களில் வீசினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் பாகம் வீசிய கூவம் ஆற்றுக்கே சென்று அடையாளம்  காட்டியுள்ளார். ஆனால் இன்னும் தலை மட்டும் எங்கே இருக்கிறதென்று சொல்லவில்லையாம்.