என்ன நடிப்புடா சாமி.. மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

How did the husband who killed his wife get caught?

மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிங்க;- நைட்டானாலே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் பாலியல் தொல்லை.. தினமும் வலியால் துடித்த மனைவி!இறுதியில் நடந்த அதிர்ச்சி

How did the husband who killed his wife get caught?

இந்நிலையில், கடந்த 30ம் தேதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் துப்பட்டவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனிடையே, வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது தாய் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு குழந்தை கதறி அழுதது. குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வெண்ணிலா  கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்திய போது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கணவர் நாடகமாடியுள்ளார். 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலி வேறொருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த முதல் கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!

How did the husband who killed his wife get caught?

வெண்ணிலாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கணவரை பிடித்து விசாரித்த போது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து,  சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios