கள்ளக்காதலி வேறொருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த முதல் கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கத்தரிகோலால் சரமாரியாக குத்தி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2வது கள்ளக்காதலன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்ரா (35). இவர் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் பகுதியில் கடந்த 8 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து கொண்டு ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, கோவையை சேர்ந்த வாலிபருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே சித்ராவுக்கு சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (37) என்ற மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால், மதுரை வீரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளது. முதல் கள்ளக்காதலன் இல்லாத நேரத்தில் மதுரை வீரனை வீட்டுக்கு வரவழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
illegal love age
இதேபோல் கடந்த 29-ம் தேதி சின்னதடாகத்தில் உள்ள வீட்டில் சித்ராவும், மதுரை வீரனும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை முதல் கள்ளக்காதலன் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
murder
இதுதொடர்பாக அவரிடம் வாக்குவாதம் செய்து கிளம்பி சென்றுவிட்டார். சித்ரா ஏற்கெனவே ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது மதுரைவீரனுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மதுரை வீரன், தான் வைத்திருந்த கத்தரிகோலை எடுத்து சித்ராவின் வயிறு, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இங்கு இருந்தால் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று நினைத்த மதுரை வீரன், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.
police
பின்னர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோவை தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மதுரை வீரனை கைது செய்தனர்.