நைட்டானாலே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் பாலியல் தொல்லை.. தினமும் வலியால் துடித்த மனைவி!இறுதியில் நடந்த அதிர்ச்சி
தினமும் குடித்து விட்டு பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்து வந்த கணவரை தோழி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம், பொன்னையன்குப்பம் கோபாலகிருஷ்ணன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் தூர் நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் ராஜசேகர் (34) என்பது தெரியவந்தது. இவரது மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: ராஜசேகரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழகத்திற்கு ஆளான ராஜசேகர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்த மஞ்சுளாவிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சரிவர வீட்டுக்கு பணம் கொடுக்காததால் குடும்பம் கஷ்டம் காரணமாக மஞ்சுளா வேலைக்கு சென்றுள்ளார்.
இதனிடையே மஞ்சுளா தனது நெருங்கிய தோழியான வினோதினியிடம் கூறி கதறி அழுதுள்ளார். தோழி மஞ்சுளா படும் கஷ்டத்தை கணவர் சசிகுமாரிடம் வினோதினி கூறியுள்ளார். இதனையடுத்து, 4 பேரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 27ம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து தோழி வினோதி வீட்டிற்கு வரவைத்துள்ளனர்.
பின்னர் சசிக்குமார், மோகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மதுவில் விஷம் கலந்து ராஜசேகரை குடிக்க வைத்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். உடலை யாரும் பார்க்காத வகையில் அங்கிருந்த கரும்புத் தோட்டம் ஒன்றில் வீசி விட்டு சென்றாத போலீசார் விசாரணையில் தெரியவந்தது.