Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் கிளாஸ்ல எப்படிய்யா ஆபாச படம் எடுக்க முடியும்..? பிஎஸ்பிபி பள்ளிக்காக வரிந்து கட்டும் துக்ளக்..!

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு புரட்டுமாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. 
 

How can I take pornography in an online class ..? Tughlaq to build and build for BSPP school ..!
Author
Tamil Nadu, First Published Jun 5, 2021, 5:16 PM IST

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு புரட்டுமாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. 

அவர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார், ஆசிரியைகளுக்கு ஆசை வலை விரித்தார் என குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி அடுக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் விரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா முதல் அலை ஆரம்பித்த கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அப்போது முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்நிலையில் ராஜகோபால் டிரவுசர் மட்டுமே அணிந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டார் என்கிற ஆதாரம் மட்டுமே முன் வைக்கப்ப்ட்டு வருகிறது. அதன் பிறகே சில மாணவிகள் அவர் மீது பாலியல் புகார்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 How can I take pornography in an online class ..? Tughlaq to build and build for BSPP school ..!

இப்படிப்பட்ட நிலையில் இந்த விவகாரம் திமுக ஆட்சிக்கு வந்த இரு வாரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நடக்கும்போதே ராஜகோபாலன் மீது புகார் கூறாமல், ஆன்லைன் வகுப்பறை நடக்கும் இந்த வேளையில் திமுக ஆட்சியில் இந்த விவகாரம் எழுப்பப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், பள்ளி மீது அபாண்ட குற்றச்சாட்டு வீசப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆன் லைன் வகுப்பில் மாணவிகளை எப்படி ஆபாசமாக படம் பிடிக்க முடியும் என்கிற ஒற்றைக் கேள்வியை ஆக்கப்பூர்வமாக முன் வைக்கின்றனர்.How can I take pornography in an online class ..? Tughlaq to build and build for BSPP school ..!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து துக்ளக் வார இதழில், ‘’சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியின் மீது சேற்றை வாரி வீசியதுனே? இதுபோன்ற நிகழ்வு பள்ளிகளில் துவங்கியது துர்பாக்கியம். ‘மீ டூ’இயக்கமாக மாறினால் எந்தப்பள்ளி ஆசிரியரைப் பற்றியும், எந்த மாணவியும், என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்றாகி விடும். ஆசிரியர்கள் என்பது மாறி, ஆசிரியைகள் மீது மாணவர்கள் கூட அவதூறு கூறலாம். அது இன்னும் கேவலமாக இருக்கும். சமூக வலைதளத்தளங்கள் மூலம் கூறப்படும் குற்றச்சாடுகளை விசாரணை செய்யாமல் பிரசுரிப்பது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளைகூட ஊக்குவிக்கலாம். இதனால், கல்விக் கூடங்களும் ஒட்டு மொத்த சூழலே மாசுபடும்.How can I take pornography in an online class ..? Tughlaq to build and build for BSPP school ..!

ஆசிரியர் ராஜகோபாலன் யார் என்பது கூட நமக்குத் தெரியாது. ஆசிரியரான அவர் மாணவிகளிடம் தவறு செய்ததாக விசாரணையில் தெரிய வந்தால், அது மன்னிக்க முடியாத குற்றம். நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டு. ஆனால், விசாரணை இல்லாமல் அவர் பெயரை அனைவரும் சேர்ந்து இப்போது இழிவுபடுத்தி முடித்து விட்டார்கள். விசாரணையின் இறுதியில்  ஒருவேளை அவரை நீதிமன்றம், குற்றமற்றவர் என்று பின்பு கூறினாலும் அவரது குடும்பத்தின் மானம் போனதுபோனதுதானே. அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தால் அந்த செய்தியை கனிமொழியும், தயாநிதியும் படிக்கக்கூட மாட்டார்கள்’’ என  விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. .

Follow Us:
Download App:
  • android
  • ios