நள்ளிரவில் பால் வியாபாரி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. தொழில் போட்டி காரணமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் சாலை எலுவபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபாலப்பா மகன் முனிராஜ் (40). பால்வியாபாரம் செய்து வருகிறார்.
ஓசூர் அருகே நள்ளிரவில் பால் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் சாலை எலுவபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபாலப்பா மகன் முனிராஜ் (40). பால்வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்காரணமாக பாகலுருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் எலுவபள்ளிக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முனிராஜை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதையும் படிங்க;- நைட்டானே ஃபுல் மப்பில் கணவர் ஓயாமல் டார்ச்சர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்..!
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி! சிக்கியது எப்படி?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முனிராஜீக்கு மனைவி இருமகள்கள், ஒருமகன் ஆகியோர் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 5 கொலைகள் நடைபெற்று இருப்பது பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.