தங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலிப்பதை விட்டு விட வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மதம் மாறி காதலித்த இளைஞரை பெண்ணின் சகோதரர் உள்ளிட்டோர் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம், பீமாநகரைச் சேர்ந்தவர் விஜய் காம்பிளி(25). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு அந்த பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் பீமா நகர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே காம்பிளி சென்ற போது அவர் காதலிக்கும் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலிப்பதை விட்டு விட வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பானது. அப்போது காம்பிளியை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த காம்பிளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காம்பிளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பததிவு செய்த போலீசார் பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தேடிவருகின்றனர்.