ஓசூர் அருகே இந்து மகாசபா மாநிலச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை, பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே இந்து மகாசபா மாநிலச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை, பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (45). இவர் அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ் அந்த கும்பலிடம் தப்பிக்க ஓடினார். சுமார் 500 மீட்டர் வரை அவர் உயிர் தப்பிக்க தலைக்கெறிக்க ஓடினார்.

ஆனால், விடாமல் துரத்திய மர்ம கும்பல், நாகராஜை மடக்கி பிடித்து கொடூரமாக வெட்டினர். இதில் தலை, இடுப்பு, கை, கால்களில் பலத்த வெட்டுப்பட்ட நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதன்பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜிக்கு மஞ்சுளா (37) என்ற மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில், ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. ஓசூரில் இந்து மகா சபா மாநில செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.