கடைக்கு காய் வாங்க சென்ற பெண்மணியை 4 பேர் கொண்ட கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

நாளுக்கு நாள் க்ரைம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. காரைக்காலை சேர்ந்த 45 வயது  மதிக்கத்தக்க கணவனை இழந்த பெண்ணுக்கு. ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இவர், பரவை மார்க்கெட்டில் காய் கறிகளை வாங்கி வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பொலிரோ காரில் வந்த 4 இளைஞர்கள், அந்த பெண்மணியை, 4 பேரும் இழுத்து சென்று காருக்குள் தள்ளி, கடத்திச் சென்றனர். பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு பெண்ணை தரதரவென இழுத்து போன அவர்கள், அங்கு மாறி மாறி பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவருக்குமே 20 வயது தான் இருக்கும்.

பிறகு காய்கள் வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் பணம் ,செல்போன் மற்றும் நகைகளை பறித்து கொண்டு, அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற பெண், தனது மகனிடம் நகை,பணம் திருடு போனது பற்றி மட்டும் சொல்லி அழுதுள்ளார். தனக்கு நடந்த பாலியல் அக்கிரமத்தை சொன்னால், அசிங்கிவிடும் என்பதால் அதை சொல்லாமல் இருந்திருக்கிறார். பணம், நகை திருடு போனதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கூப்பிட்டு கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு போலீசாரிடம் பெண்மணி நடந்ததை சொன்னார். 

ஆனால், இவர் தேம்பி தேம்பி அழுவதைக் கண்ட அங்கிருந்த பெண் போலீஸ் கேட்க்கையில், தன்னை கட்டத்தை அந்த கும்பல் கூட்டாக சேர்ந்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, போலீசார், உடனடியாகக் அந்தப் பெண்ணை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காரின் தடயங்கள், சென்ற வழி, இளைஞர்களின் அடையாளங்களை வைத்து  அந்த ஏரியாவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கடத்தப்பட்ட பொலிரோ காரையும், சம்பந்தப்பட்ட சின்னையா, விஜய் ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்து, நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள  மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.