Crime : மைனர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு ஊழியர்.. போலீசிடம் வசமாக சிக்கிய சம்பவம்
அரசு ஊழியர் ஒருவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள தோடாபிம் நகரில் பொது சுகாதார பொறியியல் (பிஹெச்இ) துறை ஊழியர் ஒருவரால் மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் சுனில் குமார் ஜாங்கிட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் துறையின் நிர்வாக பொறியாளரின் மூத்த உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் உடனடியாக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் முன்மொழியப்பட்டுள்ளது என்று துறை ரீதியான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎச்இடியில் நிர்வாக பொறியாளராக இருந்த கிரோடி லால் மீனாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பது மற்றும் சாட்சியங்களை சிதைப்பது மற்றும் வழக்கின் விசாரணையை தவறாக வழிநடத்துகிறது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!