சென்னையில் பயங்கரம்.. தலைக்கு ஏறிய மதுபோதை.. தலையில் ஏறி இறங்கிய அரசு பேருந்து..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவராவ் தெருவில் உள்ள மதுபான கடையில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க நபர்  மது பாட்டிலுடன்  உணவு வாங்கிகொண்டு  நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்தார்.

government bus smashed head of teenager in accident chennai

தலைக்கு ஏறிய மது போதையால் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் விழுந்த 30 வயது மதிக்கத்தக்கவர் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவராவ் தெருவில் உள்ள மதுபான கடையில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க நபர்  மது பாட்டிலுடன்  உணவு வாங்கிகொண்டு  நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தலைக்கேறிய போதையில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளார். அப்போது தங்க சாலையில் இருந்து  புளியந்தோப்பு வழியாக அம்பத்தூர் செல்லும் பேருந்து கொண்டிருந்தது.

திடீரென அந்த நபர் போதையில் நிலை தடுமாறி சாலையில் கீழே விழ அப்போது பேருந்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அவரது தலை மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில், அந்த நபரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios